தளபதி விஜயின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. இப்பொழுது தமிழை தாண்டி தெலுங்கிலும் கால் தடம் பதித்து நடிகர் தொடங்கியுள்ளார். அதற்கு அஸ்திவாரமாக முதலாவதாக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறதாம் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளதால் இந்த படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் கவரும் வகையில் படம் உருவாகி உள்ளது.
வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயாசுதா, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் படம் பொங்கலை குறிவைத்து வெளிவரும் என ஏற்கனவே பட குழு சொல்லியது ஆனால் தற்பொழுது நிலவும் சூழ்நிலை எதுவும் வாரிசு படத்துக்கு சாதகமாக இல்லாமல் போனதால்..
தற்பொழுது படத்தின் தேதியே மாற்றி உள்ளது ஆம் ஜூன் 14ஆம் தேதி வெளியாக இருந்த வாரிசு திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது இது விஜய் ரசிகர்களை சோகத்தில் அழுத்தி இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்திலிருந்து ஒரு தகவல் கசிந்து வருகிறது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் தற்பொழுது இறுதிக்கட்ட ஷூட்டிங் காட்சிகள் சில லீக்காகி உள்ளன இது வாரிசு படத்தில் எடுக்கப்பட்டதா என்பது உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க அந்த வீடியோவை..
ப்ரோ இதுவா.. pic.twitter.com/8RxGDQYb0J
— KMR (@KMRVIKA) November 15, 2022