சினிமா உலகில் ஒரு சில ஜோடிகள் இணைந்து நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் அந்த வகையில் நடிகை ஷாலினி அஜீத், விஜய், மாதவன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக மாறின.
நடிகை ஷாலினி தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒருகட்டத்தில் பருவ வயதை எட்டிய பிறகு ஷாலினி ஹீரோயின்னாக நடித்து அசத்தினார். அந்த காதலுக்கு மரியாதை, அலைபாயுதே போன்ற படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட் படங்களாக மாறியது. அதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை சினிமா உலகில் எட்டினார்.
இந்த நிலையில் தான் இயக்குனர் சரண் நடிகை ஷாலினியை அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்க வைக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் முதலில் ஷாலினியும் மறுத்துவிட்டார். அமர்க்களம் படத்தில் எப்படி நடிக்க வைத்தேன் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் விலாவாரியாக சொல்லி உள்ளார் இயக்குனர் சரண் அது குறித்து பார்ப்போம்.
ஒரு படத்தில் நடிகையை நடிக்க வைக்க முதலில் அந்த நடிகையை பற்றி புகழ்ந்து பேச வேண்டும் அப்போது தான் அந்த நடிகையை ஒத்துக் கொள்வார் அதுபோலவேதான் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்க முதலில் நான் ஷாலினி பற்றி புகழ்ந்து பேசினேன் அதாவது நான் சொன்னது உங்க குரல் சூப்பராக இருக்கிறது.
அமர்க்களம் படத்தில் நீங்கள் ஒரு படம் பண்ணினால் சிறப்பாக இருக்கும் என சொன்னேன் பின் அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறினார். இப்படித்தான் அமர்களம் திரைப்படத்தில் ஷாலினியை கமீட் செய்தேன் அவர் ஒரு சிறந்த நடிகை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.