தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக பாலிவுட், ஹலிவுட், ஹாலிவுட் மற்றும் கோலிவுட் என பிசியாக இருந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி வாத்தி படம் வெளியானது.
இந்த படத்தினை வெங்கி அட்லூரி இயக்கியிருந்த நிலையில் தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்த நிலையில் இவரை தொடர்ந்து சம்யுக்தா, சமுத்திரகனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் இந்த பாடல்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி பட்டி தொட்டியங்கும் பிரபலமானது இந்த பாடலுக்கு குழந்தை நட்சத்திரங்கள் வரும் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் நடனமாடி வீடியோவை பதிவிட்டு இருந்தனர்.
இந்தப் படம் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் ரிலீஸ்சாகி உலகளவில் ரூபாய் 118 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எட்டு நாட்களில் ரூபாய் 75 கோடியை வசூல் செய்ததாக படத்தின் இயக்குனர் வெற்றி விழாவின் பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடி வந்த நிலையில் தற்போது இந்த படம் நெட்பிலிப்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. சமீப காலங்களாக பலரும் ஓடிடி தளத்தின் மூலம் அதிகப்படியான படங்களை பார்த்து வரும் நிலையில் இதிலும் வாத்தி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.