This is the top actor after MGR: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மக்கள் படையால் முடிசூடா மன்னனாக இருந்து வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இவரை பிடிக்காதவர் யாரும் இல்லை அந்த அளவு ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர், புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு இப்பொழுதும் பல கோடி மக்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் திரைத்துறையில் பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எம்ஜிஆர் தான் மிகவும் பிடிக்கும், அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும் வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் சத்யராஜ் இவர் எம்ஜிஆரின் மிகப்பெரிய தீவிர ரசிகர் ஆவார். இதை நாம் பல மேடைகளில் பார்த்திருப்போம்.
சத்யராஜ் எந்த ஒரு மேடையிலும் தனது தலைவன் எம்ஜிஆரை பற்றி பேசாமல் இருந்ததே கிடையாது, அப்படி பல மேடைகளில் சத்யராஜ் எம்ஜிஆரை பற்றி ஒரு வார்த்தையாவது பேசிவிடுவார். இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் சத்யராஜ். அப்பொழுது அந்த விழாவில் தளபதி விஜய்யை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு சில ருசிகர தகவலை கூறியுள்ளார்.
அந்த விழாவில் சத்யராஜ் கூறியதாவது நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன், அதனால் அவரின் அனைத்து திரைப்படங்களையும் நான் விரும்பிப் பார்ப்பேன் அதன்பிறகு நான் விரும்பி பார்க்கக்கூடிய திரைப்படம் தம்பி இளைய தளபதி விஜய் திரைப்படம் தான். அதுமட்டுமில்லாமல் நான் எப்படி எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருக்கிறேனோ அதே போல் என்னுடைய மகன் சிபிராஜ் விஜயன் தீவிர ரசிகனாக இருக்கிறார் என மேடையிலேயே ஓபனாக பேசினார் சத்யராஜ்.
இந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்பு வெறயாகியது தான் ஆனால் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
எம் ஜி ஆர் அப்பரம் விஜய் தான் அவர் படத்துக்கு பிறகு நான் விரும்பி பார்க்கிற படம்னா அது விஜய் படம் தான்
ஒரு தமிழ் நடிகர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்ததது பெருமையா இருக்கு
சிபிராஜ் விஜய் யோட வெறித்தனமான பேன்~ நடிகர் சத்தியராஜ் @Sibi_Sathyaraj pic.twitter.com/5POApItD0s
— Deepa Vijay ツ (@Deepa_off) July 19, 2020