சினிமா காலத்திற்கேற்றவாறு முன்னேற சில முக்கியமானவர்களாக இருப்பவர்கள் இயக்குனர்கள் தான் ஒரு இயக்குனரிடம் இருந்து இன்னொரு இயக்குனர் அந்த வித்தையை கற்றுக் கொண்டு காலத்திற்கு ஏற்றவாறு பயணிப்பார்கள் அந்த வகையில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து தற்போது இயக்குனராக விஸ்வரூபம் எடுத்துள்ள ஓடி கொண்டு இருப்பவர் தான் அட்லீ.
இதுவரை நான்கைந்து திரைப்படங்கள் எடுத்துள்ளார் அந்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான் இவர் கடைசியாக விஜய்யை வைத்து பிகில் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் அதைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஷாருக்கானுக்கு கதையைச் சொல்லி ஓகே செய்தார்.
அடுத்த கணமே நடிகர்களை ஒரு வழியாக தேர்வு செய்து வைத்தார் அட்லி அந்தவகையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் மேலும் இவர்களுடன் இணைந்து காமெடி நடிகர் யோகி பாபும் இந்த படத்தில் நடிக்க களமிறங்கியுள்ளார் இந்த படத்தின் முதல் ஷூட்டிங் புனேவில் விரைவில் தொடங்க உள்ளது.
படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு படத்தின் தலைப்பையும் ஒரு வழியாக வைத்துள்ளது படக்குழு அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மகனாக இரு வேடங்களில் நடிக்க உள்ளார் அதில் ஒன்று ராணுவ அதிகாரியாக இருப்பார் என கூறப்படுகிறது.
எனவே இந்த திரைப்படத்திற்கு “ஜவான்” என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் சைடில் இருந்து பேசப்படுகிறது.