தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யாவின் அடுத்த படம் குறித்த படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருக்கிறது எனவே இந்த படத்தினை இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது முத்தையா தொடர்ந்து கிராமத்து கதைக்களம் இருக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் கடைசியாக நடிகர் கார்த்திக்கை வைத்து விருமன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் மேலும் கேப்டன் வெற்றிக்கு பிறகு ஆர்யாவும் முத்தையாவும் இணையும் இந்த திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் பூஜை முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் கோவில்பட்டி அருகே நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது அந்த படத்தில் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள் அதாவது சற்றுமுன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த படத்திற்கு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் மிகவும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருப்பார் என தெரிய வருகிறது மேலும் அந்த போஸ்டரில் ஆர்யாவுக்கு பின்னணியில் பாட்ஷா ரஜினியின் போஸ்டர் உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்களை தொடர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தினை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Here's the Title and First Look of my next. Hope u all like it 😊
#KatherBashaEndraMuthuramalingam #KEMthemovie@dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @venkatraj11989 @veeramani_art @ActionAnlarasu @ertviji @teamaimpr pic.twitter.com/V33QcEluns— Arya (@arya_offl) December 10, 2022
இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்தானி நடிக்க இருக்கிறார் இவர் கடைசியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த விந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.