கமர்சியல் திரைப்படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை குவித்து வருபவர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. சிவகார்த்திகேயன் சினிமா பயணம் மிகப்பெரிய ஒரு உச்சத்தை ஈட்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடி அள்ளி புதிய சாதனையும் படைத்தது. இதுவே சிவகார்த்திகேயன் 100 கோடியை தொட்ட முதல் படமாக பார்க்கப்பட்டது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் நடிகர் சிவகார்த்திகேயன். முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படம் டான். இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணைந்த அசத்தி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க விடாமல் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK 20 படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கவுள்ளார் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலை SK 20 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்தது சொன்னது போலவே இன்று மாலை 6 மணிக்கு SK 20 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளது. SK 20 படத்துக்கு “ப்ரின்ஸ்”என பெயர் வைக்கப்பட்டுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை..
Here's the first look of #PRINCE 🇮🇳🕊🇬🇧#PrinceFirstLook@anudeepfilm #MariaRyaboshapka #Sathyaraj sir @MusicThaman @manojdft @premji @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas #NarayandasNarang @AsianSuniel @SBDaggubati @puskurrammohan @iamarunviswa pic.twitter.com/NbLSADkdv8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 9, 2022