தமிழ் சினிமா உலகில் காமெடி ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படங்கள் எப்பொழுதும் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் அது போன்ற கமர்சியல் படங்களை கொடுத்து வெற்றிகளை குவித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அந்தக் காரணத்தினால் தமிழ் சினிமாவில் நம்பர்-1 ஹீரோவாகவும் வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த படம் கூட நல்லதொரு வெற்றியை ருசித்த நிலையில் அடுத்ததாக நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படம் அதனை தொடர்ந்து இப்போ விஜய்யை வைத்து பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை எடுத்து முடித்துள்ளார். வெகு விரைவிலேயே பீஸ்ட் திரைப்படம் வெளிவர இருக்கிறது. அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு ரஜினி உடன் சேருவார் என கூறப்படுகிறது.
ரஜினி மற்றும் நெல்சன் இணையும் இந்த படம் வேற லெவலில் உருவாக இருக்கிறது இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கு பாஸ் என டைட்டில் வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
ரஜினிக்கு பாஸ் என்கின்ற படத்தின் டைட்டிலில் செம்மையாக செட் ஆகும் என ரசிகர்களும் மக்களும் கூறி வருகின்றனர். இதையே தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறது. அதேசமயம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.