நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல இதில் முதலாவதாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
சிம்புவும் கௌதம் மேனனும் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்தப் படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், neeraj madhav, kayadu lohar மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் காதல் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் நடிகர் சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து 18 வயது பையனாக நடித்து அசத்தியுள்ளார். நடிகர் சிம்பு ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் படத்தைப் பற்றி ஏதாவது ஒரு தகவலை கொடுப்பார். ஆனால் இந்த தடவை வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிம்பு அவ்வளவாக பேசவில்லை..
ஆனால் அதன் பிறகு பேசிய சிம்பு தற்போது இந்த படம் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு செம்ம விருந்து கொடுக்கும் இந்த படத்தின் இன்டர்வெல் பிளாக் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளை நன்கு உற்று கவனிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
நிச்சயம் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் மேலும் சிம்பு இந்த படத்திற்காக தனது மொத்த திறமையும் வெளிக்காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகின்ற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.