கைதி, மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு அதிரடியான படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்திற்கு “விக்ரம்” என ஆரம்பத்திலேயே பெயர் சூட்டப்பட்டது மேலும் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பதை அவ்வபொது கூறிவருகிறார்.
அந்த வகையில் இந்தப் படத்தில் கமலுக்கு எதிராக 5 வில்லன்கள் நடிக்க களமிறங்குவார் என கூறி வந்த நிலையில் அது ஒவ்வொன்றாக நிறைவேறி வண்ணமே இருக்கிறது முதலில் பகத் பாசில் இணைந்தார் அதன்பிறகு விஜய்சேதுபதி அடுத்ததாக ஜான் ஆபிரகாம் லிங்கனை அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இவருடன் சேர்ந்து சமீபகாலமாக வில்லன் ரோலில் மிரட்டும் அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோரும் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது இப்படியிருக்க திடீரென லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறினார் அதே போல நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
போது சமூகவலைதளத்தில் “விக்ரம்” படத்தின் போஸ்டர் தான் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் நடிப்பிற்கு பேர்போன நடிகர் பகத் பாசில் பேட்டி ஒன்றில் நான் கமலை சந்தித்தால் முதலில் அவரிடமும் நான் கேட்கக்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும் என கூறினார் அவர்களிடம் என்ன கேட்க இருப்பார் என்பதை பேட்டியில் மேலும் தெரிவித்தார்.
அதாவது மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், குணா போன்ற படங்களை நானும் பார்த்தவன் என்றும் மேலும் இப்படி நடிக்க தங்களால் மட்டுமே எப்படி முடிகிறது என்று அவரிடம் கேட்க விரும்புவதாக கூறினார்.