Rajini : 80, 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை பல வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் நடிகராக வலம் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். தற்பொழுது ரஜினிக்கு வயதாகி உள்ளதால் அதிக படங்களில் வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து வருகிறார்.
அதே சமயம் பல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்தும் வருகிறார். ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் குடும்ப படமாக வெளிவந்த இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பு கண்டதை தொடர்ந்து தற்போது இளம் இயக்குனர் நெல்சன் உடன் கை கோர்த்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படத்தின் பாடல், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா போன்றவை ஒவ்வொன்றாக வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் ஜோராக நடைபெற்று வருகின்றன.. இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் முதற்கொண்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.
ஜெயிலர் படம் நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று வெளியாகயுள்ளது. ஜெயிலர் படம் வெளியாக உள்ள இந்த நேரத்தில் ரஜினி இமய மலைக்கு சென்று இருப்பதாக சில தகவல்கள் வெளி வருகின்றன. ரஜினி இமயமலை சென்றதற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற ரகசியம் வெளிவந்துள்ளது. அதாவது ரஜினி ஜெயிலர் படம் முழுவதையும் பார்த்து உள்ளார். படத்தின் கதை தான் எதிர்பார்த்தது போல் இல்லாததால் விரக்தி அடைந்தார்.
நெல்சன் மீது ரஜினி வைத்திருந்த நம்பிக்கையும் சுக்கு நூறாகி விட்டதாக கூறப்படுகின்றன. முழு படத்தையும் பார்த்து ரஜினி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக எழுந்து சென்று விட்டாராம்.. சில காலமாக மன உளைச்சலுக்கு ஆளான ரஜினி ஜெயிலர் படத்தின் அதிருத்தியாலும் இமயமலைக்கு சென்றுள்ளார் என கூறப்படுகிறது .