வாடிவாசல் படத்தின் கதை இதுதான்.? வெற்றிமாறன் இப்படித்தான் எடுக்கப் போகிறார் – வெளியான சூப்பர் தகவல்.

vadivasal
vadivasal

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர காத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி போன்றோர் நடித்து அசத்தியுள்ளார்கள்தற்போது இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் சூர்யாவுடன் கை கோர்த்து வாடி வாசல் திரைப்படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.அதற்கு ஏற்றார் போல தற்போது சூர்யாவும் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.. இந்த திரைப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார் மற்றும் வில்லனாக இயக்குனர் அமீர் நடிப்பதாக தகவல்கள் எழுந்துள்ளன.

மேலும் இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் எஸ் கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்க இருக்கிறார் .இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றியிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் 1960 கால கட்டங்களில் நடந்த ஒரு கதையை மையமாக வைத்து தான் படம் உருவாக இருக்கிறது.

அந்த காலத்தில் எப்படி இருக்குமோ அது போலவே படத்தையும் நகர்த்த படக்குழு முடிவெடுத்துள்ளதாக  கூறப்படுகிறது.இயக்குனர் வெற்றிமாறன் சமீபகாலமாக நாவல்களை பின்பற்றித்தான் படங்களை எடுத்து வருகிறார் அதுபோல இதுவும்  ஒரு நாவலை மையமாக வைத்துதான் இந்த திரைப்படத்தை எடுக்க இருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன

அப்படி என்றால் இந்த படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாயலும் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவிலேயே தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.