வாடிவாசல் கதை இதுதான் வெற்றிமாறனே கூறிய தகவல்.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

vaadivasal
vaadivasal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா இவர் தற்போது வணங்கான், வாடிவாசல், சூர்யா 42, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தின் கதை குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைக்கிறார் வாடிவாசல் படைத்திருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

மேலும் நடிகர் சூர்யா அவர்கள் வாடிவாசல் படத்திற்காக சமீபத்தில் காளைகளுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் வெற்றிமாறன் அவர்கள் தனது விடுதலை திரைப்படத்தை  இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில்  விஜய் சேதுபதி மற்றும் சூரிய உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த இடைவேளையில் நடிகர் சூர்யா அவர்கள் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அடுத்ததாக வாடிவாசல் படத்தில் சூர்யா அவர்கள் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வெற்றிமாறன் அவர்கள் பேட்டக்காளி என்ற இணைய தொடரை தயாரித்துள்ளார்.

தற்போது வெற்றிமாறன் அவர்கள் தயாரித்துள்ள பேட்டைக்காளி திரைப்படத்தின் கதையும் வாடிவாசல் படத்தின் கதையும் ஒன்றுதான் என்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது இது குறித்து பேட்டி அளித்த வெற்றிமாறன் பேட்டைக்காளி திரைப்படம் சமகாலத்தில் நடக்கும் கதை வாடிவாசல் 1960களில் நடைபெறும் கதை அந்த காலகட்டத்தில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.இதனால் சூர்யா ரசிகர்கள் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.