வாடிவாசல் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் கதை இதுதான் – யார் இயக்குனர் தெரியுமா.?

surya
surya

சினிமா உலகம் காலத்திற்கு ஏற்றவாறு புதுவிதமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களையும் எச்டி தொழில்நுட்ப உதவியுடன் வேற மாதிரி எடுத்து வருகிறது.இதனால் ரசிகர்கள் வருகின்ற ஒவ்வொரு படத்தையும் வேற லெவலில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் சூர்யாவின் படத்திற்கு என மிகப்பெரிய ஒரு வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீசாக இருக்கின்றன .அதன் பிறகு இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படம் வேற ஒரு லெவலில் உருவாக இருப்பதால் ரசிகர்கள் பெருமளவில் காத்துக் கிடக்கின்றனர். மேலும் வாடிவாசல் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் யாருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமிபகாலமாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ரவிக்குமார் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் சூர்யா, இயக்குனர் ரவிக்குமார் இணையும் திரைப்படம் சைன்ஸ் ஃபிக்ஸன் திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படியே அமையுமானால் சூர்யாவுக்கு இது ஒரு வித்தியாசமான திரைப்படமாக இது இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் அந்த திரைப்படமும் நிச்சயம் ரசிகர்கள் வேற ஒரு லெவெலில் கொண்டாடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.