கமல் – வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதான்.? பயங்கரமா இருக்கே.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

kamal
kamal

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பெருபலான படங்கள் வெற்றி படங்கள் தான். என் இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக உருவானது.

படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல அள்ளி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இதனை முடித்து விட்டு அடுத்ததாக ஹச். வினோத் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ண இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதலாவதாக இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் கைகோர்த்து இவர் படம் பண்ண உள்ளார் என கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் இணைவதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த காணப்பட்ட நிலையில் தற்போது அது குறித்து ஒரு தகவலும் வெளியாகி உள்ளது அதாவது ஹச். வினோத், நடிகர் கமலை சந்தித்து படத்தின் முதல் பாதி கதையை கூறி உள்ளார் அவருக்கு ரொம்ப பிடித்தபோது இது உடனடியாக படமாக உருவாக இருக்கிறதாம்.

இந்த படம் அரசியல் பின்புலத்தில் உருவாகும் ஒரு கதையாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க கமல் சுமார் 35 நாள் கால் செய்து கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமான தகவல் பெறும் என செய்திகள் தெரிவிக்கின்றன.