“தளபதி 68” படத்தின் கதை இதுதான்.? RAW ஏஜெண்டாக மிரட்ட போகும் விஜய்

Thalapthy 68
Thalapthy 68

Vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர்  நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டதை தொடர்ந்து லோகேஷ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார்.

படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது படத்தில் விஜய் உடன் கைகோர்த்து சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.  லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு உடன் கூட்டணி அமைத்து தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க இருக்கிறது யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெய், மாதவன், பிரபுதேவா போன்றவர்கள் நடிக்க உள்ளனர். படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் அவருக்கு ஜோடிகளாக ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன ஆனால் இது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக சொல்லவில்லை..

இந்த நிலையில் தளபதி 68 படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய். தந்தை, மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மகனுக்கும் தந்தைக்கும் இடையே மோதல் தான் படத்தின் கதைகளம் எனக் கூறப்படுகிறது. இதில் ஒரு விஜய் பீஸ்ட் படத்தில் வருவது போல் RAW ஏஜென்ட் ரோலில் நடிக்கிறாராம்.. படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் தில்லர் படமாக  உருவாகும் என கூறி வருகின்றனர்.