சினிமா உலகில் இருக்கும் இயக்குனர்கள் தன் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் படத்தை எடுக்கின்றனர் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அதில் இருந்து மாறி தனது படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் அதிக விருதுகளை அள்ள வேண்டும் என்ற நோக்கில் படம் எடுக்கின்றனர். அந்த லிஸ்டில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் பாலா.
இவர் தனது திரை பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது திரைப்படங்கள் பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் மேலும் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் அந்த படம் ஒரு ஃபேவரட் படமாக மாறிவிடும் அப்படித்தான் பாலா படமே எடுப்பார்.
பாலா இதுவரை எடுத்த படங்கள் வெற்றி படங்கள் தான் இப்பொழுது கூட 18 வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவுடன் கைகொடுத்து வணங்கான் எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் ஹீரோயினாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இதுவரை இந்த படத்தில் இருந்து பஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ளது. வணங்கான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வாடிவாசல் படத்திலும் சிறுத்தை சிவா உடன் ஒரு படமும் பண்ண இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வணங்கான் படம் குறித்து பேசி உள்ளார்.
வணங்கான் திரைப்படம் சூர்யாவுக்கும் சரி இயக்குனர் பாலாவுக்கும் சரி மிகப்பெரிய ஒரு வெற்றி படம் அந்த அளவிற்கு கதை சூப்பரா இருக்கிறது இந்த படத்தில் மொத்தமே மூன்று நான்கு கேரக்டர்களை மட்டுமே வைத்து கதை நகர்கிறது ரொம்ப நல்ல கதை எனக்கு தெரியும் என பேசினார். மேலும் பேசிய அவர் சூர்யாவின் நடிப்பு பசிக்கு இந்த கதை ஒரு நல்ல விருந்தாக அமையும் எனவும் தெரிவித்தார் இதோ அந்த வீடியோ.
• @Suriya_offl's #Vanangaan 🔥 pic.twitter.com/VWgFckDZvj
— SingamGroupThrissur™ (@singamgroup8) August 14, 2022