Kanguva : வணங்கான் படம் ட்ராப்பானதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் “கங்குவா” இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திரிஷா பட்டாணி நடித்து வருகிறார் அண்மையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்திலிருந்து glimpse வீடியோ வெளிவந்து மிரட்டியது.
இந்த நிலையில் கங்குவா திரைப்படம் இப்படிதான் இருக்கும் என பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி உள்ளார் அவர் சொன்னது.. கங்குவா திரைப்படம் 14ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டு கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது படத்தில் 20 சதவீதம் வரலாற்றையும் 80 கற்பனையையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.
பண்டைய காலகட்ட நடைமுறைகளான இறைவழிபாடுகள், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன கங்குவா என்பதற்கு நெருப்பில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம்.. இந்த படத்திற்கு இயக்குனர் சிவா நிறைய மெனக்கடல் செய்துள்ளார் அது மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொத்தம் பத்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
அதனால் அந்த மொழிக்கேற்ப முக்கிய நடிகர்கள் பின்னணி குரல் தந்து மிகுந்த எதிர்பார்ப்பை தரும் அதற்கு ஏற்றவாறு டீசர் தயாரிக்கப்பட்டு வருகிறது பல மொழிகளில் வெளியாக இருப்பதால் அதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்க கூடியதாக நிச்சயம் இருக்கும் படத்தின் முக்கிய காட்சிகள் 3D VFX தொழில் நுட்பத்தில் தத்துவமாக கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் படத்திற்கான வேலைகள் அதிக அளவு இருக்கிறது அனைத்து பணிகளும் முடிந்ததும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமைப்படுத்தும் வகையில் படம் அமையும் என்று தெரிவித்துள்ளார்.