இதுதான் கதை பீஸ்ட் படத்தில் தளபதிக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் தான்..! மெல்ல மெல்ல வெளிவந்த பீஸ்ட் பட ரகசியம்..!

beast-1
beast-1

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி முடித்த கையோடு  தற்போது கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன்  மற்றும் அபர்ணா தாஸ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை பற்றிய அப்டேட்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் ஆனது வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்போவதாக  செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தளபதி விஜய் எப்பொழுதும் ஆக்சன் ஹீரோவாக தான் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் தற்சமயம் இந்த திரைப்படத்தில் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். பொதுவாக நெல்சன் திலிப்குமர் அவர்கள் ஏற்கனவே நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் இதுபோன்ற கடத்தல் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தை வைத்து இருப்பார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் கூட கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் நெல்சன் திலீப்குமார் ஏன் கடத்தலை மையமாக வைத்து திரைப்படம் எடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்