பிரபல நடிகர் சிவகுமாரின் இரண்டு மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கி பல நல்ல படங்களை கொடுத்து தற்போது உச்ச நட்சத்திர நடிகர்களில் இவர்களும் ஒருவர்களாக இருந்து வருகின்றனர். நடிகர் சூர்யா தற்போது பாலாவுடன் இணைந்து வணங்கான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்க பல படங்களிலும் கமிட் ஆகி கைவசம் வைத்திருக்கிறார். இது போல் நடிகர் கார்த்தியும் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய மூன்று படங்களில் நடித்த முடித்துள்ளார். இந்த படங்கள் மூன்றும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. அதில் முதலாவதாக முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்கில் வெளியாகயுள்ளது.
இந்த படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டீசர் சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது அதில் நடிகர் கார்த்தி, சூர்யா, பிரகாஷ்ராஜ், சூரி, இயக்குனர் முத்தையா, இயக்குனர் ஷங்கர், அதிதி ஷங்கர், கருணாஸ், ரோபோ சங்கர் போன்ற பலரும் கலந்து கொண்டு படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். தற்போது விருமன் படத்தின் இயக்குனர் நடிகர் நடிகைகள் போன்றோர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி தனது அண்ணனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என நினைத்தேன் என கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
அதன் பின்பு தனது அண்ணனுக்காக ஒரு பயோபிக் கதையையும் எழுதி வைத்துள்ளேன் அதை படமாக்குவது எனது கனவு எனக் கூறியுள்ளார். சினிமா ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்தி பின்பு பருத்திவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது