90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சத்திர கதாபாத்திரம், கேஸ்ட் என அனைத்திலும் நடித்து பேரையும், புகழையும் பெற்றவர் நடிகர் சரத்குமார். ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போனவராக இருந்தார் சரத்துகுமார்.
ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் வயது ஏற எற ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சரத்குமாருக்கு கிடைக்கவில்லை இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்,நடிகைகளுக்கு அப்பா, சித்தப்பா மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்..
படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சரத்குமார் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்த வருகிறார்.
அண்மையில் நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. விஜயுடன் வாரிசு படத்தில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது அந்த படம் ஆக்சன் மற்றும் காதல் கலந்த ஒரு படமாக உருவாகி வருகிறது என கூறினார். படப்பிடிப்பு தளத்தில் விஜய் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொன்னி நதி பாடலை தான் அடிக்கடி முணுகிக் கொண்டே இருந்தார் என சரத்குமார் கூறினார்.
அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தான் தனக்கு அரசியலில் தனி இடம் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. எனக்கு ஏற்கனவே அரசியலில் தனி இடம் இருக்கிறது என கூறினார்.