ஒரு நேரத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டிய சீரியல் நடிகை பூஜாவா இது..! தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா..?

pooja-2

சின்னத்திரையை பொருத்தவரை ஹீரோ ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவ்வாறு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகைகள் ஏராளம்.

அந்த வகையில் 12 வருடங்களுக்கு முன்பாக சின்னத்திரையில் மிகச்சிறந்த வில்லியாக கொடிகட்டி பறந்த நமது நடிகை தன்னுடைய 14 வயதிலேயே இந்த துறையில் நுழைந்தவர் இதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் இளைஞர்களையும் கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மட்டுமின்றி அவருடைய குடும்பத்தாரும் சின்னத்திரையில் புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள். அந்த வகையில் பூஜாவின் தந்தையார் இறந்த பிறகு கல்கி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது பல்வேறு கஷ்டங்கள் அவருக்கு வந்த பொழுதும் இவர் சின்னத்திரையில்  நடிப்பதை மட்டும் நிறுத்தியதே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்துள்ளார். இவ்வாறு நமது நடிகைக்கு மிக பிடித்த நடிகை என்றால் அது குஷ்பூ தான். இவர் குஷ்புவுடன் குங்குமம் என்ற சீரியலில் இணைந்து நடித்துள்ளார்.

அந்தவகையில் இந்த சீரியலின் பொழுது குஷ்பு அதிக அளவு ஊக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல் அவள் இல்லையேன் நான் இன்று இப்படி வளர்ந்திருக்க முடியாது என பூஜா தெரிவித்துள்ளார். பூஜா தன்னுடைய குடும்பத்தாருடன் பெங்களூரில் வசித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு யூடியூப் சேனலை வைத்துள்ளார் இதில் அவ்வப்போது மேக்கப் வீடியோக்களை பதிவேற்றம் செய்து  வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சகோதரன் உடன் இணைந்து ஒரு புரோடக்சன் கால் ஒன்றையும்  நடத்திவருகிறார் இதன்மூலமாக அவர் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல் அத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நடிகர்களுக்கு அவரே காஸ்ட்யூம் டிசைனராக இருந்து வருகிறார் இவ்வாறு பல திறமைகளை கையில் வைத்துக் கொள்ளும் நடிகை பூஜா தற்பொழுது கூட சீரியலில் நடிக்க மிக ஆர்வத்துடன் இருக்கிறாராம்.

pooja-1
pooja-1