இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்து தற்பொழுது பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் தான் விடுதலை. இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றிருக்கிறது. தற்பொழுது வரையிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட வெற்றிமாறன் நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக காத்திருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் வெற்றினை கண்டுள்ளார். மேலும் சூரியும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் பலரையும் கவர்ந்திருக்கும் நிலையில் இவருடைய தத்ரூபமான நடிப்பை பார்த்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சூரியை பாராட்டில் நினைய வைத்துள்ளார்கள்.
இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இவர்களை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், பாவனி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இவர்களை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சேத்தன் ஓசி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் விடுதலை படத்தின் முக்கியமான காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. அதில் ஒன்றுதான் விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியாரை பிடிக்க திட்டமிடும் போலீசார்கள் அந்த ஊரில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை தனித்தனியாக சித்திரவதை செய்வார்கள் அதில் பெண்களையெல்லாம் ஆடைகள் இல்லாமல் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதுபோல் காட்டப்பட்டு இருக்கும்.
எனவே இந்த காட்சி சற்றே வித்தியாசமாக அமைந்தது எனவே இதற்கு விளக்கம் அளித்த சேத்தன் அந்த காட்சியை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டுமோ அப்படி வெற்றிமாறன் செய்தார் என்றும் மேலும் அதில் பெண்களுக்கு ஸ்கின் கலர் ஆடை கொடுக்கப்பட்டதாகவும் மேலும் காட்சி எடுக்கப்படும் அறைக்குள் சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாரையும் உள்ளே விடவில்லை எனவும் கூறினார். இந்த படத்தில் கௌதம் மேனன் மற்றும் சேத்தன் இருவரும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில் இவர்களுடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து உள்ளார்கள்.