50 வயதை கடந்தும் நான் இளமையாக இருக்க காரணம் இதுதான் உண்மையை உடைத்த நதியா.!

nadiya
nadiya

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் முன்னணி நடிகைகளாக ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்தாலும் தங்களது அழகு இளமை இருக்கும் வரை மட்டும்தான் தங்களுடைய மார்க்கெட்டை இழக்காமல் இருந்த வர முடியும்.

அதன் பிறகு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் வயதாகி ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் மிகவும் இளமையாக அழகாக இருந்து வருபவர் தான் நடிகை நதியா. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எப்படி இவ்வளவு இளமையாக அழகாக இன்னும் இருக்கிறீர்கள் என கேட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நதியா பிரபல யூட்யூப் சேனல் ஒன்று இருக்கிறது பேட்டி அளித்திருக்கும் நிலையில் அதில் தனது அழகுக்கான ரகசியம் மற்றும் ஏராளமான தகவல்களை பற்றி கூறியிருக்கிறார். அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது, நடிகை நதியாவிடம் நீங்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள் தமிழ் திரைவுலகம் என்று கூறும் பொழுது நீங்கள் நடித்த எந்த திரைப்படம் ஞாபகம் இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நடிகை நதியா அவர்கள் தமிழில் இரண்டு படங்கள் உள்ளன ஒன்று பூவே பூச்சூடவா இரண்டாவது M.Kumaran son of mahalakshmi இந்த இரண்டு படங்கள்தான் என் வாழ்வில் மறக்க முடியாத படங்கள் என்று கூறி இருக்கிறார். அதற்கு அடுத்ததாக திரைத்துறையில் இன்னும் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர் முன்பு இருந்த அளவுக்கு இல்லை தற்போது திரைத்துறையில் நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள் இருந்தாலும் முன்னேறி போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது என பதில் அளித்துள்ளார்.

மேலும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அனைத்து விஷயங்களுக்கும் கோபப்பட மாட்டேன் மிகவும் சில்லாக இருப்பேன் எந்த விஷயத்திற்கு கோபப்பட வேண்டுமோ அதற்கு மட்டும் தான் கோபப்படுவேன் எனக் கூறியுள்ளார்.