என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான் – ஜெயம் ரவி வெளிப்படையான பேச்சு..!

jeyam-ravi
jeyam-ravi

நடிகர் ஜெயம் ரவி தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையிலும் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக நடித்த பூமி திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து பல்வேறு புதிய படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் இறைவன் கபிலன் என பல்வேறு படங்கள் வரிசை கட்டி இருகின்றன. மேலும் புதிய படங்களிலும் கமிட் ஆகிய ஓடுகிறார் நடிகர் ஜெயம் ரவி. இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் ஏனென்றால் இது ஒரு வரலாற்று கதை சம்பந்தப்பட்ட படம் அதுவும் இந்த படத்தை எடுக்க பல்வேறு இயக்குனர்களும்..

இந்த கதையில் நடிக்க பல்வேறு நடிகர்களும் ஆசைப்பட்டனர் அதனால் ரசிகர்களையும் தாண்டி சினிமா வட்டாரங்களே இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் இந்த படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி முக்கிய ரோலில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில தகவல்களை வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் நான் நிறைய திரைப்படங்களில் நடிக்கணும்னு ஆசையே கிடையாது.

குறைந்த திரைப்படங்களை நினைத்தாலும் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள் நான் ஜெயம் படத்திற்கு பிறகு எட்டு மாதம் வீட்டில் சும்மா இருந்தேன் என கூறினார். குவாண்டியை விட குவாலிட்டி தான் முக்கியம் அதனால்தான் தமிழ் சினிமாவில் நான் குறைந்த தோல்வி படங்களை கொடுத்திருக்கிறேன் என அவர் கூறினார்..