அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்.! லிவிங்ஸ்டன் பேச்சு

ajith
ajith

திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு ஜாம்பவான் லிவிங்ஸ்டன்.  இவர் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் முதலில் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு நல்ல நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடித்து வந்த இவர் திடீரென ஹீரோவாகவும் நடித்து வெற்றிகளை கண்டார்.

இப்படிப்பட்ட லிவிங்ஸ்டன் வயது முதிர்வின் காரணமாக தற்பொழுது குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளி திரை தாண்டி சின்ன திரையிலும் வாய்ப்புகள் குவிகின்றன. கண்ணான கண்ணே, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நினைத்தாலே இனிக்கும், அன்னலட்சுமி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

நடித்தும் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட லிவிங்ஸ்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் மற்றும் அஜித் பற்றி பேசி உள்ளார். ஒரு கதையை உருவாக்கிக் கொண்டு விஜயகாந்துகிட்ட சொல்லி செய்து காட்டினேன் அவர்  அடுத்த நாள் வாங்க என சொல்லிவிட்டார் கதை பிடித்திருந்தால் அடுத்த நாள் வரச் சொல்லி இருக்கிறார் என சந்தோஷத்துடன் போனேன்.

ஆனால் அங்கு பல நபர்கள் இருந்தார்கள் விஜயகாந்த் நான் சொன்னா ஆள் இவர்தான் என பேசிக்கொண்டு இருந்தார்கள் நான் கதைப் பற்றி பேசுகிறார்கள் என்று பார்த்தால் பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தில் எனக்கு ஒரு சின்ன ரோல் இருக்கிறது. அதில் என்னை நடிக்க சொன்னார் பிறகு ஓகே சொன்னேன்.

அதன் பிறகு நடிகனாக மாறினேன் என எமோஷனலாக பேசினார். தொடர்ந்து பேசிய லிவிங்ஸ்டன் அஜித்தை பற்றியும் பேசினார் அவர் சொன்னது..  ராசி படத்தில் அஜித்குமார் உடன் நடித்திருந்தேன் அவர் ஒரு வித்தியாசமான குணத்தை உடையவர் நமக்கு யாராவது பிரச்சனையை பண்ணினாலோ நம்மை பற்றி தப்பாக பேசினாலும்..

கூட அவங்க கிட்ட நம்ப சண்டைக்குப் போக வேண்டிய அவசியமே இல்ல காலம் அவங்களுக்கு கண்டிப்பாக பதில் கொடுக்கும் என்று சொல்வார் எனக்கு பிடிக்காதவர்கள் பற்றி கூட அஜித் இதே வார்த்தையை சொல்லி இருக்கிறார் அஜித்குமாரின் பொறுமையால் தான் இன்று இந்த இடத்தில் இருக்கிறார் என பேட்டியில் கூறினார்