ரஜினிக்கு பிறகு கமல் கெட்டப் போட்ட ஹரிஷ்கல்யாண் வெளிவந்த இரண்டாவது புகைப்படம்.!

kamal-hasan

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் ஹரிஷ் கல்யாண் இவரது நடிப்பில் தற்போது கசடதபற, ஓமனபெண்ணே ஆகிய திரைப்படங்கள் உருவாகி உள்ளது மேலும் ஹரிஷ் கல்யாண் நடித்துவரும் எல்லா திரைப்படங்களும் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஹரிஷ் கல்யாணுக்கு வாங்கி தந்தது இந்த திரைப்படத்தை இயக்குனர் இளன் இயக்கி யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் மற்றும் இசயில் வெளியானது.

இந்தக் கூட்டணியில் தற்போது ஒரு திரைப்படம் நடைபெற்று வருகிறது என்றே கூறலாம் ஹரிஷ் கல்யாண் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது அந்த பர்ஸ்ட் லுக்கில் ரஜினியை போலவே அச்சு அசலாக அப்படியே இருந்தார் ஹரிஷ் கல்யாண்.

மேலும் இந்த திரைப்படத்தின் 2வது ஃபர்ஸ்ட்லுக் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது அதாவது இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் உலக நாயகன் கமல்ஹாசன் போலவே அச்சு அசலாக அப்படியே இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் குழம்பி வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் எத்தனை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பெரிய கேள்வி எழுப்பி வருகிறார்கள்.