தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருவர்தான் நடிகர் தனுஷ் இவர் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் தற்போது நடிகர் தனுஷ் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடந்து வருவதன் காரணமாக அவர் எந்த திரைபடத்தில் எப்பொழுது நடிக்கிறார் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது மட்டுமல்லாமல் இது சர்ச்சையிலும் முடிவடைந்துவிட்டது.
அந்தவகையில் நடிகர் தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்க இருக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் கூட இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இத்திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு அவர்கள் தான் தயாரிக்க உள்ளார்.
ஆனால் தற்போது செல்வராகவன் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருப்பதன் காரணமாக தனுஷின் திரைப்படத்தை ஓரங்கட்டி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு செல்வராகவன் கூறியது என்னவென்றால் முதலில் நானே வருவேன் என்ற திரைப்படத்தின் கதையை கூறினேன் அது தனுஷுக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம்.
அதன்பின்னர் ராயன் என்ற பெயரில் ஒரு புதிய கதையை படமாக்க உள்ளதாகவும் கோரியுள்ளார். ஆனால் இதற்கு இடையில் ராயன் என்ற தலைப்பை நானே வருவேன் என மாற்றி விட்டாராம். இதுபற்றி அவரிடம் கேள்விகள் எழுப்பும்போது கதையில் எந்த மாற்றமும் கிடையாது டைட்டில் நானே வருவேன் தான் என செல்வராகவன் கூறியுள்ளார்.