தமிழ் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் கமல் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
ஆனால் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் தனது அரசியல் களத்தில் குதித்தார் அதனை முன்னிட்டு சமிபத்தில் சட்டமன்ற வேட்பாளராக களம் கண்டு தற்பொழுது ரிசல்ட்டுக்காக எதிர்நோக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் வாக்குப் பதிவு முடிந்த கையோடு தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தை தனது சொந்த செலவில் கமல் தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
கமல் 15 வருடத்திற்கு முன்பு வேட்டையாடு விளையாடு என்ற திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
அதன்பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது எகிறி உள்ளது.