லோகேஷை ஓரம் தள்ளுங்க.. விஜய்க்கு ஏத்த இயக்குனர் இவர்தான் – சீறிய பிரபல தயாரிப்பாளர்.

vijay
vijay

வசூல் சக்கரவர்த்தியாக தமிழ் திரை உலகில் பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில்  வெளிவரும் ஒவ்வொரு திரைப்படமும் அசால்டாக 200 கோடி வசூல் செய்கின்றன ஏன் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வெற்றிக்கு இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இருவரும் ஏற்கனவே இணைந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. லியோ படத்தின் முதல் கட்டப்பட விடுப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் விஜயுடன் இணைந்து  த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய்தத், கௌதமேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பல டாப் ஜாம்பவான்கள் இணைந்துள்ளதால்  லியோ படத்தில் ஆக்க்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம்   ரசிகர் ஒருவர் உங்களுக்கு விஜயின் கால்ஷீட் கிடைத்தால் என்ன பண்ணுவீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த அவர்.. எனக்கு விஜயின் கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவை தான் இயக்க சொல்வேன் ஏனெனில் இப்போ உள்ள இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒரு ஆக்சன் கதைகளை திறன் பட இயக்குவதில் வல்லவராக இருக்கிறார்.

மேலும் அவரிடம் நகைச்சுவை பஞ்சம் இருக்காது.. இயல்பாகவே வெங்கட் பிரபு யூமர்சன்ஸ் உள்ள ஆள்.. அதுவும் விஜய்க்கு நன்றாகவே நகைச்சுவை காட்சிகளில் நடிக்க தெரியும் அதனால் வெங்கட் பிரபுவை தான் விஜயின் படத்தை இயக்க சொல்லிட்டு என கூறி உள்ளார். அப்படி ஒரு விஷயம் நடந்தால் நல்லது தான் என தளபதி ரசிகர்களும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.