விடுதலை -1 படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா.?

viduthalai-

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக  இருப்பவர் வெற்றிமாறன் இவர் முதலில் பொல்லாதவன் படத்தை இயக்கி வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி திரைப்படம் தான். இப்பொழுது கூட விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் அதன்படி முதல் பாகம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. விடுதலை திரைப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களுக்கும் மற்றும் போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகி வருகிறதாம் இந்த படத்தில் விஜய் சேதுபதி சூரி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தாலும் பல வருடங்கள் முடிக்க முடியாமல் எடுத்துக் கொண்டே போனது அதற்கு காரணம் இந்த படம் காடு மலை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. மேலும் விஜய் சேதுபதி சூரி போன்றவர்கள் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால்..

இந்த படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போனதாக சொல்லப்படுகிறது. விடுதலை படம் முதலில் சின்ன பட்ஜெட்டில் குறுகிய நாட்களில் எடுக்க பட குழு திட்டம் போட்டு இருந்ததாம் திடீரென விஜய் சேதுபதி விடுதலை படத்தில் இணைந்ததால் இந்த படத்தின் பட்ஜெட் அதிகமானது ஷூட்டிங் தேதியும் அதிகமாகின.

எது எப்படியோ ஒரு வழியாக விடுதலைப் படத்தை தற்பொழுது வெற்றி கரமாக எடுத்து முடித்துள்ளனர் படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ஜனவரி 26 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு அடுத்த அடுத்த அப்டேட்களை கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.