எனக்கும் சமந்தாவுக்கு உள்ள உறவு முறை இதுதான்.. நான் அவரை “ஜிஜி” என்று தான் கூப்பிடுவேன்.! தவறாக பேச வேண்டாம் பிரபலம் போட்ட ட்வீட்.

samanatha-and-preetham-

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து  நடித்ததன் காரணமாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது நடிகர் நாக சைதன்யா உடனே ஏற்பட்ட காதல் போகபோக ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வாழ்க்கையிலும் சினிமாவிலும் சிறப்பாக வெற்றிகண்ட வந்த நிலையில் ரசிகர்கள் பார்வையிலும் சிறந்த ஜோடிகளாக இருந்தனர் மேலும் குழந்தையை பெற்றுக் கொண்ட பிறகும் சிறப்பாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு வருடங்கள் கழித்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று தற்போது பிரிந்துள்ளனர்.

இதற்கான காரணம் சரியான முறையில் தெரியாததால் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் சமந்தாவிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர் மேலும் பலருடன் இவர் இருப்பதாகவும் சில சர்ச்சைகளையும் கிளப்பி வந்தனர். அந்த வகையில் சமந்தாவுக்கும் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்திக்கும் இருந்த நெருக்கமான தொடர்பு இவர்கள் பிரிவதற்கான காரணம் என பலர் கூறினர் .

இந்த தகவலுக்கு நடிகை சமந்தா தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார் இந்த நிலையில் ப்ரீத்தம் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து விலாவாரியாக அவர் சொல்லியுள்ளார். சமந்தா எனக்கு சகோதரி போன்றவர் நான் அவரை எப்பொழுதும் ஜிஜி என்றுதான் அழைப்பேன் ஜிஜி என்றால் தமிழில் சகோதரி என்று அர்த்தம். அப்படி இருக்கையில் எங்களை நீங்கள் எவ்வாறு தொடர்பு படுத்திப் பேச முடியும் எனக் கூறினார் எனக்கு நாகசைதன்யாவை பல வருடங்களாக தெரியும்.

எனக்கும் சமந்தாவுக்குமான உள்ள உறவுமுறை என்னவென்று அவருக்கு தெரியும் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தால் கூட அது மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இது ரசிகர்கள் போர்வையில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள் இது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

preetham
preetham