சினிமாவில் நடிக்க ஆசைப்படும் நடிகர் நடிகைகள் பலருக்கும் எடுத்தவுடனே அந்த வாய்ப்பு கிடைக்காததால் முதலில் கிடைக்கின்ற சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு பின்பு வெள்ளி திரையில் கால் தடம் பதிக்கின்றன. அதுபோல பல சின்னத்திரை நடிகர் நடிகைகளும் தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து.
வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சீரியல்கள் மற்றும் காமெடி ஷோக்கள் போன்றவை எவ்வளவு முக்கியமாக அமைகிறதோ அதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் பல கலைஞர்களுக்கு வழித்தடமாக அமைகின்றன. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பல கலைஞர்களை அவர்களது கேரியரில் முன்னேற்றியுள்ளது
. தற்போது வரை தமிழில் ஐந்து சீசன்கள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் கூடிய விரைவில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது இதில் கலந்து கொள்பவர்களின் பெயர்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் ஆறில் விஜே அர்ச்சனா கலந்து கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஆரம்பத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
பின்பு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் அர்ச்சனாவாக நடித்து வந்தார். இவர் அண்மையில் இந்த சீரியலில் இருந்து விலக அவருக்கு பதில் வேறு ஒருவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் அர்ச்சனா இந்த சீரியலை விட்டு விலகுவதால் அவர் பிக் பாஸ் 6 யில் தான் கலந்து கொள்ள உள்ளார்.
என பல பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இது குறித்து அவரிடம் கேட்கும் போது ராஜா ராணி 2 சீரியலில் நான் 3 வருஷத்துக்கு மேல் நடித்து விட்டேன் இப்போது என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த சீரியலை விட்டு விலகினேன் என்று பேசி உள்ளார். மேலும் அவர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியும் பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.