சினிமாவை பொருத்தவரை பொதுவாக நடிகைகள் தான் தங்களுடைய அழகு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் 45 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகர் தான் விஷால் தன்னுடைய நடித்த சக நடிகர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில் இன்னும் முரட்டு சீர்களாக வாழ்ந்து வருகிறார் விஷால்.
விஷாலிடம் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டால் நடிகர் சங்கம் கட்டிடம் முடிய வேண்டும் என்றும் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி சமாளித்து வருகிறார். மேலும் இவர் நடிகர் சரத்குமார் அவர்களின் மகள் நடிகை வரலட்சுமி காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென சில வருடங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் ஒருவரின் பொண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது எனவே அவரையாவது திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அந்த திருமணம் பாதிலேயே நிறுததப்பட்டது.
இதன் காரணமாக நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். மேலும் அடிக்கடி கோவில்கள் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் எனவே சமீபத்தில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது நடிகர் விஷாலுக்கு ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால் தான் அவருக்கு திருமண வாழ்க்கை கூடாமலேயே இருக்கிறதாம்.
இதன் காரணமாகத்தான் அடிக்கடி கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து வருவதை விஷால் அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் விரைவில் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கி விஷால் அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் இது குறித்து விஷால் அவர்கள் விரைவில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.