நடிகர் விக்ரம் 90 காலகட்டங்களில் இருந்து சினிமா உலகில் நடித்த ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் திரை உலகில் சைலண்டாக இருந்து கொண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பவர். இப்பொழுது கூட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது குறிப்பாக இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். போஸ்ட் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற்றது இதில் விக்ரம் மற்றும் இந்த படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கலந்து கொண்டார் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோப்ரா படம் குறித்தும் தனது அப்பாவை குறித்தும் அவர் பேசியிருந்தார் அதில் அவர் சொன்னது மூன்று வருடங்களுக்கு முன்பு அஜய் ஞானமுத்துவின் கற்பனை மற்றும் எண்ணத்தின் மீது இருந்த நம்பிக்கை உள்ளது அதற்காக இந்த படத்தில் நடிக்கிறேன் எனது அப்பா கூறினார்.
மேலும் தான் மகான் படப்பிடிப்பில் சில காட்சிகள் நான் சோர்வடைந்திருந்தேன் ஆனால் அப்பா சோர்வு அடையவே இல்லை அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது அது எப்படி என்று அவரிடம் நான் கேட்டேன் அதற்கு அப்பா பல கஷ்டங்களையும், போராட்டங்களையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளேன் எனவே இதெல்லாம் ஒரு சாதாரண நம் என கூறினார். இதை அப்பொழுது கேட்டு நான் நெகிழ்ந்து போனேன் மேலும் இதை அவரிடம் இருந்து நானும் கற்றுக் கொண்டேன் என கூறினார்.
அதேபோல நடிகை மிருணாளினி பேசுவையில் இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி விக்ரமின் ரசிகராக அவரின் படங்களை பார்த்துள்ளேன் தற்பொழுது அவருடன் படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இதை நான் மறக்கவே மாட்டேன் அவரிடம் பல்வேறு விதமான விஷயங்களை கற்றுக் கொண்டேன் அதை எடுத்துக் கொண்டு நான் சினிமாவில் நடிப்பேன்.. மறக்க மாட்டேன் என கூறினார் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.