விஜய் சைக்கிளில் வருவதற்கு காரணம் இது தான்.! பரபரப்பு தகவல்.

vijay 1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தளபதி விஜய். கடைசியாக இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனை தொடர தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு, டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உட்பட இன்னும் பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள்.

இது ஒருபுறமிருக்க சில மாதங்களாக மிகவும் பரபரப்பாக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. அந்த வகையில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு பல நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என்று அனைவரும் தங்களது ஓட்டுரிமைகளை செலுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் தளபதிவிஜய் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து சைக்கிளில் ஓட்டு போடுவதற்காக வந்துள்ளார். எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் பொதுமக்கள் என்று அனைவரும் இவரின் பின்னால் செல்பி,  வீடியோக்கள் போன்றவற்றை  எடுத்துக் கொண்டு இவர் பின்னாடியே அனைவரும் வருகிறார்கள்.

இதனைப் பார்த்த பலர் விஜய் அனைவரும் தங்களது ஓட்டுரிமைகளை செலுத்த வேண்டும் என்பதற்காகத் தான் சைக்கிளில் வந்தார் என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்நிலையில் திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் இருந்து வருகிறது.

vijay-cycle-raid
vijay-cycle-raid

எனவே அதனை குறிக்கும் வகையில் தான் தளபதி விஜய் சைக்கிளில் வந்துள்ளார். என்று பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.