விக்னேஷ் சிவனுக்கு நடிகையால் நழுவிப்போன ஏ கே 62.! காரணம் இதுதான்

ajith-ak-62
ajith-ak-62

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன், ஏகே 62 திரைப்படத்தினை இயக்க இருந்த நிலையில் அந்த படத்தின் வாய்ப்பு பறிக்கப்பட்டது,அதற்கான காரணம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு,வரலட்சுமி சரத்குமார் கூட்டணியில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன்.

இந்த படத்தினை அடுத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்க பல வருடங்களாக ஏராளமான திரை பிரபலங்களிடம் கதையை கூறி வந்த நிலையில் அனைவரும் இந்த படத்தில் நடிக்க மறுத்து வந்ததால் இறுதியாக இவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இந்த படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது இந்த படத்தினை அடுத்து தானா சேர்ந்த கூட்டம்,பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற சில திரைப்படங்களை இயக்கினார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெற்றதில்லை. அதோடு மட்டுமல்லாமல் சூர்யாவை வைத்து இவர் இயக்கியிருந்த தானா சேர்ந்த கூட்டம் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்றது இதனை அடுத்து நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி என மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் கலவை விமர்சனத்தை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் அஜித்தின் 62வது திரைப்படத்தினை இயக்குகிறார் என கூறப்பட்டது ஆனால் தற்பொழுது அந்த வாய்ப்பும் பறிக்கப்பட்டிருக்கிறது. விக்னேஷ் சிவன் கூறிய கதை பிடிக்காத காரணத்தினால் மகிழ்ந்திருமேனியை அஜித் ஒப்பந்தம் செய்தார் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் விரைவில் வெளியாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மேலும் ஏகே62 திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் விரும்பியுள்ளார்.

ஆனால் லைக்கா நிறுவனம் திர்ஷாவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்த நிலையில் இதனை விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராய், காஜல் அகர்வால் என பலரைப் பரிந்துரை செய்தும் விக்னேஷ் சிவன் பிடிவாதமாக இருந்துள்ளார். எனவே தான் பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் கூட பேசிய நிலையில் அப்பொழுதும் விக்னேஷ் சிவன் ரிஜெக்ட் செய்ததால் லைக்கா நிறுவனம் கடுப்பில் அஜித்திடம் இதனை பற்றி பேசி விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து நீக்கினார்களாம்.