தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் 1960ஆம் ஆண்டு தன்னுடைய கலை பயணத்தை தொடர்ந்தார்.அந்த வகையில் 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ந்து நீடித்து வருகிறார். மேலும் இளம் கதாநாயகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தற்பொழுது வரையிலும் நடித்து வருகிறார்.இவ்வாறு கமலஹாசன் சினிமா துறையில் பணியாற்றாத துறைகளே இல்லை என சொல்லப்படுகிறது இவ்வாறு சாதிக்க வேண்டும் என கமல் தன்னுடைய 60 வருட திரை வாழ்க்கையில் பல சாதனைகளை வெளிப்படுத்தி உள்ளார் அதில் முக்கியமான ஆறு சாதனைகளைப் பற்றிய பார்க்கலாம்.
நான்கு வயதில் கவர்னரிடம் கோல்டு மெடல்: அதாவது 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.மேலும் இவருடன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் அதற்கு விருதாக கவர்னரிடமிருந்து கோல்டு மெடல் ஒன்றை முதன் முதலில் வாங்கினார்.
ஆறு மொழிகளில் நடித்த ஒரே நடிகர்: கமல் தமிழில் எந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பு திறமையை காட்டி கலக்கி வருகிறாரோ அதேபோல் ஹிந்தி மலையாளம் தெலுங்கு கன்னடம் பெங்காலி என ஆறு மொழி திரைப்படங்களிலும் நடித்த வருகிறார் அந்த வகையில் கமல் ஹிந்தியில் மட்டும் 15 படங்களில் நடித்திருக்கிறார் 1981ஆம் ஆண்டு வெளியான ஏக் துஜே கேலியே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு தன்னுடைய வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்களையும் மற்றும் மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு முறை ஆஸ்கருக்கு சென்ற இவருடைய படங்கள்: கமலஹாசன் நடித்து நல்ல வரவேற்பினை பெற்ற ஹே ராம்,இந்தியன், குருதிப்புனல், தேவர் மகன், நாயகன், ஹிந்தி படமான சாகர்,தெலுங்கு படமான சஸ்வாதி முத்தியம் போன்ற மொத்தம் ஏழு திரைப்படங்களும் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குனர் கமலஹாசன்: இவர் எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன் படம் சிவாஜியின் சவாலே சமாளி, ஜெயலலிதாவின் அன்பு தங்கை ஆகிய திரைப்படங்களுக்கு டான்ஸ் கொரியராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த படமான சினிமா ஸ்பெஷல், விருமாண்டி,உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களிலும் கொரியாகிராபராக பணியாற்றி இருக்கிறார்.
ஸ்கிரிப்ட் ரைட்டர்: இயக்குனர் சக்தி இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு கமலஹாசன், ஸ்ரீவித்யா நடிப்பில் வெளியான உணர்ச்சிகள் திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் உதவி இயக்குனராகவும், ஸ்கிரிப்ட் டைரக்டராகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவார்டுகளின் நாயகன்: அதாவது இவர் 19 முறை பிலிம் பேர் அவ்வாரடை வென்றுள்ளார், இதனைத் தொடர்ந்து சிறந்த நடிகருக்காக நான் விருதை மூன்று முறை நேஷனல் அவார்ட் சென்றுள்ளார். 1990ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, 2014ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது, 2016ஆம் ஆண்டு செவாலியர் விருதும் பெற்றுள்ளார் அதன் பிறகு 2011ஆம் ஆண்டு சிறந்த பலநாட்டியருக்கான விருதையும் பெற்றுள்ளார்.