தமிழ் சினிமாவில் இன்று மாபெரும் நடிகராக வலம் வர வேண்டியவர் தான் நடிகர் சிம்பு இவர் தன்னுடைய சோம்பேறித் தனத்தின் மூலமாகவும் முயற்சி செய்யாத காரணத்தாலும் தற்போது ஒரு ஹிட் படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என எண்ணி வருகிறார்.
அந்தவகையில் இவர் சமீபத்தில் நடித்த திரைப்படத்தின் கதையை சரியாக தேர்வு செய்யாமல் கிடைத்த படத்தை நடித்து முடித்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தார். இந்நிலையில் உடல் எடையும் கூடி போய் அங்கிள் மாறி ஆன சிம்பு தற்போது தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டார்.
மேலும் சமீபத்தில் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இசைவெளியிட்டு விழாவில் நடிகர் சிம்பு தன்னுடைய பழைய பிரச்சனைகள் அனைத்தையும் பேசி கண்ணீரில் மூழ்கடித்து உள்ளார்.
அந்தவகையில் தன்னுடைய பிரச்சனையை நான் பார்த்துகிறேன் அதேபோல என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் சிம்பு சொன்னது ரசிகர்களின் மனதை பாதித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நெல்சன் கூட்டணியில் டாக்டர் 100 கோடி சாதனையை படைத்தது ஆனால் இதற்கு முன்பாகவே சிம்பு நெல்சன் இருவரும் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை உருவாக்கியிருந்தார்கள்.
ஆனால் அத்திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது இதற்கு காரணம் என்ன வென்றால் தான் அப்பொழுது பலராலும் வெறுக்க பட்டு இருந்தேன் அப்போது இந்த திரைப்படம் வெளிவந்தால் கண்டிப்பாக சரியாக இருக்காது அந்த ஒரே காரணத்தினால் தான் அந்த படத்தை நிறுத்தி விட்டோம் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.