இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு இதுதான் காரணம் உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த பயிற்சியாளர்.! திடீரென டிப்ஸ் கொடுத்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபநாசம் – என்ன சொன்னார் தெரியுமா.?

cricket-

கிரிக்கெட் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் இந்திய அணி ஒரு சிறந்த அணி என்று இந்திய அணி தான் 20 ஓவர் உலக கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே கிரிக்கெட் வல்லுனர்கள் ரசிகர்களும் கூறி வந்தனர் அப்படித்தான்.  இந்திய அணியும் அதிக சீனியர் வீரர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள் பலர் இருந்ததால் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் அரையிறுதிக்கு  கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வெளியேறியது இந்திய அணிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம் என கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் இந்திய அணியையும், பயிற்சிகளையும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் அதில் அவர் கூற வருவது :

தொடர்ந்தது பயோ பபுள் சூழலில் இருந்ததால் எப்படிப்பட்ட வீரர்களும் மோசமாக விளையாட கூடும் என தெரிவித்தார். இந்திய வீரர்கள் தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐபிஎல், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், என தொடர்ந்து ஆறு மாதங்களாக பயோ பபுள் சூழலில் இருந்துள்ளனர் அவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும் அதை கொடுக்கவில்லை.

ravi shatri
ravi shatri

அதுவே தற்போது தோல்விக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.  இதில் ரவி சாஸ்திரியின் கருத்து குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம்  சில டிப்ஸ்களை கூறி உள்ளார் அவர் கூறியது கிரிக்கெட்டில் சில ஏற்ற தாழ்வுகள் சகஜம் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வண்டும் பயோ பபுவில் இருக்கும் வீரர்கள் மன அளவில் பாதிக்கப்படுவது உண்மைதான்.

அதனை சமாளிக்க நாங்க ஒரு குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பாக இருக்கிறோம். ஒரு வீரன் நீங்கள் மனதை சாந்தப்படுத்த வேண்டும் அதை கட்டுப்படுத்தவில்லை என்றால் மனஅழுத்தம் அதிகமாகி அது எல்லாவற்றையும் மோசமாக்கி விடும் எனக் கூறினார்.