தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தி சினிமாவில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என கேள்வி கேட்டு வருகிறார். அதற்கு மகேஷ் பாபு தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதுதான் எனக்கு கம்ஃபர்ட் என்றும் கூறினார். பாலிவுட்டில் நடிப்பதற்கான எண்ணம் எதுவும் இல்லை என்று அதிரடியாக கூறி வருகிறார்.
இதுவரை மகேஷ்பாபு வுக்கு பாலிவுட் திரைபடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளது. பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை அணுகியதாகவும் கூறி வருகிறார். மகேஷ்பாபு ஆனால் அவர்களின் கோரிக்கையை நான் நிராகரித்து விட்டேன் என்றும் ஒரு போடாக போட்டுள்ளார். இதுவரை பாலிவுட் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் இனிமேல் நடித்து வருவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாலிவுட் சினிமா எனக்கான சம்பளத்தை தர முடியாது என்றும் நானும் அதற்கு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் கூறி வருகிறார். டோலிவுட் சினிமாவில் நடித்துக்கொண்டே இந்திய சினிமா ரசிகர்களை எந்த அளவுக்கு மகிழ்விக்க முடியுமோ அந்த அளவுக்கு மகிழ்வித்து கொண்டு இருப்பேன் என மகேஷ்பாபு பேசி வருகிறார். ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது.
இதனைத் தொடர்ந்து ஹிந்தி திரையுலகத்தில் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என நடிகர் மகேஷ்பாபு கூறிவந்த நிலையில் ஒரு படத்துக்கு அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள். என்கிற கேள்வி எழுந்துள்ளது இதுவரை மகேஷ்பாபு 60 கோடி ரூபாய் வரை வாங்கி வந்தாராம் ஆனால் சமீபகாலத்தில் மகேஷ் பாபு 80 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
எனவே பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் மற்றும் அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களாக இருக்கும் அவர்களே ஒரு படத்துக்கு 80 கோடி ரூபாய் தான் வாங்குகிறார்களாம் ஆனால் மகேஷ் பாபு அப்படி சொல்லி இருக்கிறார்.என்று பேசப்படுகிறது அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்துக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட போவதாகவும் கூறுகின்றனர்.