தமிழ் திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்யாததற்கு இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த நடிகர் கமல்..!

kamal kaasan
kamal kaasan

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படுவார் தான் கமல்ஹாசன். தற்போது இவர் ஒரு பேட்டியில் கே ஜி எஃப் 2 மற்றும் ஆர் ஆர் ஆர் இந்த திரைப்படத்தை பற்றி வசூல் குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கமலஹாசன் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இவர் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு திரை உலகில் நடிகராக விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானது. மேலும் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் திரையுலகில் எப்போ வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து  கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி திரை உலகில் வெளியாக இருக்கிறது.

தற்போது  இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில்  பத்தல பத்தல பாடல்கள் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த பாடலை நடிகர் கமலஹாசனே எழுதி அவரே பாடியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்கள் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ், ஜெயராம் போன்ற பலரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உள்ளனர். அந்த விழாவில் கமலஹாசன் கேஜிஎப் 2 திரைப்படத்தை பற்றி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில்  வெளியாகியுள்ளது.

கமலஹாசன் சமீபத்தில் விக்ரம் திரைப் படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை பேசியுள்ளார். மேலும் அவரிடம் அந்த திரைப்படம் குறித்து பலரும் கேள்வி கேட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் ஆயிரம் கோடி வசூல் குறித்து உங்கள் கருத்து என்னவென்று கமலஹாசனிடம் கேட்டுள்ளனர்.  அவர் அதற்கு ஒரு திரைப்படம் தோல்வி  என்றாலும் வெற்றி என்றாலும்  ஒருத்தரை மட்டும் சேராது ஒரு திரைப்படத்திற்கு சுமார் 200 பேர் முக்கிய பங்கு உண்டு.

மேலும்  ஒரு திரைப்படத்தில் ஒருத்தர் தவறு செய்து விட்டால் அந்தப் படமே மொத்தமும் தோல்விதான் எந்தவிதத்திலும் தயாரிப்பாளர்களை குறை சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இயக்குனர் ரமேஷ் சிப்பி இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் தங்கப்பதக்கம் இந்த திரைப்படம் பாலிவுட்டில் சக்தி என்ற பெயரில் வேற லெவல் ஹிட்டடித்தது. அது மட்டுமில்லாமல் இங்கு எனக்கு  Ek thije keliye என்ற திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விக்ரம்  திரைப்படமும் வெற்றியை பெற்று தரும் என்று நம்புகிறேன் என்று  தெரிவித்துள்ளார்.