தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் வெளிவரததன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.
தற்போது தல அஜித் சுமார் இரண்டு வருடங்களாக வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்குவது மட்டுமின்றி நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தான் தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஹூமா குரோஷி நடிப்பது மட்டுமின்றி காமெடி கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உண்டாக்கியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
முதலில் தீபாவளி தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் வெளியாகும் அதன்பிறகு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில் ஏமாற்றம்தான் மிச்சம். இன் நிலையில் வலிமை திரைப்படம் அடுத்த வருடம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏன் வலிமை திரைப்படத்தை ரிலீஸ் செய்யவில்லை என போனி கபூர் அதற்கான காரணத்தை கூறி உள்ளார் ஏதாவது தியேட்டர் பிரச்சனையின் காரணமாக தான் இந்த திரைப்படத்தை தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் ரசிகர்கள் பலரும் தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியானதும் காரணமாகதான் வலிமை திரைப்படத்தை வெளியிட வில்லை ஏனெனில் வசூல் தரப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் தான் என பலரும் கூறி வருகிறார்கள்.