சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் பல வருடங்களாக பயணித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து தற்போது பல இளம் நடிகர்களும் ரசிகர்களை கவரும்படியான படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றனர். இருந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
இவர் தற்போது தனது 169 ஆவது திரைப்படம் ஆன ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்தப் படத்தை டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப் குமார் ரஜினியுடன் முதல்முறையாக கைகோர்த்து ஜெயிலர் படத்தை இயக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என தெரிய வருகிறது.
இந்த நிலையில் படத்தில் மற்ற கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளை இயக்குனர் நெல்சன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் இதுவரை ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார் போன்ற நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஜெயிலர் படத்தில் எனக்கு ஒரு கெஸ்ட் ரோல் அமைத்து தருமாறு நெல்சன் இடம் கேட்டுள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் ஒரு சில நிமிடங்கள் நடித்தால் தனது சினிமா மார்க்கெட் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்த்து இதற்கு எனக்கு சம்பளம் கூட வேண்டாம் என சிவகார்த்திகேயன் நெல்சன் இடம் கேட்டுள்ளார். நெல்சன் கதையில் சிவகார்த்திகேயன் வரும்படியான ஒரு ரோலை உருவாக்கி ரஜினி இடம் கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட ரஜினி டென்ஷனாகி என்னுடைய படம் என் படமாக மட்டுமே இருக்க வேண்டும் என ரஜினி கோபப்பட உடனே நெல்சன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் விடுங்க சார் என கூறியுள்ளாராம். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரஜினி நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் இயக்குனரிடம் இந்த படத்தில் எனக்கு ஒரு கெஸ்ட் ரோல் வாய்ப்பை கேட்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் ரஞ்சித் ரஜினி இடம் கேட்க அப்பொழுதும் என்னுடைய படம் என்னுடைய படமாக தான் இருக்க வேண்டும் என மறுத்துள்ளாராம். அந்தக் கட்டத்தில் தனுஷ் ரஜினியின் மருமகனாக இருந்த போதே அவரது படத்தில் நடிக்க தனுஷுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பார். இதெல்லாம் சிவகார்த்திகேயனுக்கு அதிக பசங்கித்தனம் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.