தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின்பு ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் வாரிசு நடிகராக சினிமா உலகில் நுழைந்தாலும் தனது திறமை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.
மேலும் இவருக்கு சினிமாவில் தெரியாத விஷயமே இல்லை அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கிறார். திரை உலகில் நடிகராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராக, பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டவராக விளங்கி வருகிறார் சிம்பு. இவர் தற்போது நடித்துயுள்ள பத்து தல படம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் தான் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு உள் அரங்கில் நடைபெற்றது இதில் பத்து தல படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், சாண்டி மாஸ்டர் போன்ற பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையே அதிரும் வகையில் சிம்பு பேசினார்.
அந்த செய்தி இணையதள பக்கத்தில் வைரல் ஆகின. இப்படி இருக்க சிம்பு பற்றிய செய்திகள் மற்றும் சர்ச்சைகள் பல இணையதள பக்கத்தில் வெளியாகிய வண்ணமே இருக்கும். அந்த வகையில் சிம்புவை பற்றி அனைவரும் கூறும் ஒரு குறை என்றால் சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவார் எனக் கூறுவார்கள் அதற்கான உண்மையான காரணத்தை முதல் முதலில் சிம்புவின் தாயார் கூறியுள்ளார்.
அவர் கூறியது, நாங்களே நிறைய படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்கிறோம். உதாரணமாக வடிவேலுக்கு 11 மணி படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்னதாக எடுத்த பல காட்சிகள் தாமதம் ஏற்பட்டால் வடிவேலுவை போன் செய்து தாமதமாக வாருங்கள் என சொல்லி விடுவோம். அதுபோல் தான் சிம்புவின் படப்பிடிப்பு சமயத்திலும் காலையில் ஏதாவது லைட்டிங் செட் அப் போன்றவை தாமதம் ஏற்பட்டால்..
இயக்குனர்கள் சிம்புவுக்கு போன் செய்து 12 மணிக்கு வாருங்கள் என்று கூறுவார்கள். இதனால் தான் சிம்பு தாமதமாக போவாரே தவிர லேட்டா தான் போக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மேலும் சரியான நேரத்தில் செல்லக்கூடிய நடிகரும் சிம்பு தான் என்றும்.. மக்களிடம் தேவையான வதந்திகளை பரப்பவே இப்படி எல்லாம் செய்கிறார்கள். உண்மை கண்டிப்பாக ஜெயிக்கும் என ஆவேசமாக பேசி உள்ளார் சிம்புவின் தாயார் உஷா..