தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிப்படுகின்றன அதில் அனைத்து படங்களும் வெற்றி ருசிக்கிறதா என்றால் கேள்விக்குறிதான் வெற்றி பெற்று படங்கள் அனைத்தும் படங்களும் மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளி உள்ளதா என்றால் அதுவும் பெருகிறதா..
ஒரு கேள்வி குறிதான் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மற்றும் ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கம் பக்கம் இழுக்கும் அந்தப் படங்கள் மட்டுமே எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளும். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று மக்கள் கூட்டத்தை திரையரங்கு பக்கம் இழுத்துக் கொண்டே இருக்கிறது.
அதன் காரணமாகவே அந்த படத்தின் அதிகமாக அள்ளி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மூன்று நாள் முடிவில் மட்டுமே 230 கோடி அள்ளி உள்ளது வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் பொன்னியின் செல்வன் படத்தில் காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மேலும் வசூலிலும் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றியே ருசிக்க ஒளிப்பதிவு முக்கிய காரணம் மறுபக்கம் ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்தது தான்.. அந்த படத்திற்கு பிளஸ் ஆக இருக்கிறது குறிப்பாக இந்த படத்தில் ஆதித்த கரிகாலன், வந்திய தேவன், குந்தவை, நந்தினி ஆகியோர் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்து வந்துள்ளது.
மக்களும் , ரசிகர்களும் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா தான் நடித்த குந்தவை கதாபாத்திரத்தில் எப்படி இவ்வளவு கட்சிதமாக நடிக்க முடிந்தது என்பது குறித்து பேசி உள்ளார். அதாவது படப்பிடிப்பின் போது மணிரத்தினம் திரிஷாவிடம் நீங்கள் ஒரு இளையராணி என்பதை நினைவில் வைத்துக் கொண்டே இருங்கள்.
ராணியாகவே வாழுங்கள் நீங்கள் இப்பொழுது ஒரு நகரத்தை சேர்ந்த பெண் கிடையாது என அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பாராம் மேலும் அவர் திரிஷாவிடம் உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் ஜெயலலிதாவை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் ஜெயலலிதா எப்படி பேசுவார் ஜெயலலிதா எப்படி நடந்து கொள்வார் என்பதை எல்லாம் நினைத்துப் பாருங்கள் என்று கூறுகிறார். திரிஷாவும் அதை மனதில் வைத்து நடித்ததாக சொல்லப்படுகிறது.