விஜய் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்ததற்கான காரணம் இதுதான்.. பிரபல நடிகை பேட்டி.!

theri
theri

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சுனைனா கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு வம்சம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தொடர்ந்து மாசிலாமணி, நீர் பறவை, சிலுக்குவார் பட்டி சிங்கம் என அடுத்த அடுத்த திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இவர் கடைசியாக விஷால் உடன் இணைந்து நடித்த லத்தி திரைப்படம் மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுனைனா ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தெறி திரைப்படத்தில் எதற்காக நடித்தேன் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் தெறி. இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, ராதிகா, மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.  அந்த வகையில் சுனைனாவும் விஜய் திருமணத்திற்காக பார்க்கும் பெண்ணாக ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தார்.

sunaina
sunaina

எனவே இதனால் ஒரு பிரபல நடிகை ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஏனென்றால் சுனைனா தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் எனவே தான் இப்படி ஒரு சில நிமிடம் மட்டுமே நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பேட்டியில் எனக்கு கட் ஃபீலிங் என்ன சொல்லுதோ அதுதான் நான் பண்ணுவேன், எல்லோருக்குமே அவங்க என்ன பண்ணனும் அப்படின்னு சுயமான ஒரு முடிவு இருக்கும், உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்வீங்க, அந்த சமயத்தில் என்ன தோணுதோ அதை பண்ணுவீங்க, தெறி படத்தில் நான் ரொம்ப விரும்பி தான் பண்ணுனேன் ஆனால் நான் பண்ண வேணாம்னு நடிக்க மறுத்த படங்கள் நிறைய இருக்கு அது ஒரு லிஸ்ட்டே இருக்கு என சுனைனா கூறியுள்ளார்.