பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட ரஜினி – மணிரத்தினம் மறுக்க இதுதான் காரணமாம் ..!

rajini
rajini

திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருகிறார் இவர் இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி பற்றி ஒரு செய்தி வந்துள்ளது அதாவது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை அந்த வகையில் ரஜினிக்கு பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டு உள்ளார் ஆனால் அது நிறைவேறாமலேயே போனது அது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் முதல் பாகம்  வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம்பிரபு, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.

இந்த படத்தை ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் அந்த வகையில் ரஜினி இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு பிடித்த கதாபாத்திரம் பெரிய பழுவேட்டையர் தான் ஆனால் இந்த படத்தில் நடிக்க கூட அவர் மணிரத்தினத்திடம் கேட்டுள்ளார் ஆனால் மணிரத்தினம் முடியவே முடியாது என கூறிவிட்டார்.

இவ்வாறு  மணிரத்தினம் சொல்ல காரணம் என என்பது குறித்து அண்மையில் அவரே வெளிப்படையாக பேசி உள்ளார் அந்த கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்து அவர் ரசிகரின் விமர்சனங்களுக்கு ஆளாக நான் விரும்பவில்லை அதனால் தான் ரஜினிக்கு பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தை நான் கொடுக்கவில்லை மணிரத்தினம் வெளிப்படையாக பேசி உள்ளார்.