தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளவர் இயக்குனர் ஹரி. இவர் இதுவரை சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களை வைத்து அதிகம் ஆக்சன் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் சிங்கம் 1,2,3, சாமி, சாமி ஸ்கொயர், கோவில், வேங்கை என பல படங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஹரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் அருண் விஜய் உடன் கைகோர்த்து யானை என்ற படத்தை எடுத்துள்ளார் இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது அண்மையில் கூட இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. மத்தியில் நல்ல வரவேற்பை டிரைலர் பெற்றுள்ளது.
இந்த படத்தில் அருண் விஜயுடன் சேர்ந்து ராதிகா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலங்கள் பலர் நடித்து அசத்தியுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஹரி பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் அதாவது இந்த படத்திற்கு முதலில் ஹீரோயினை தேடி கொண்டிருக்கும் போது பிரியா பவானி சங்கரை கமீட் செய்யலாம் தான் பார்த்தோம் ஆனால் ஏற்கனவே அருண் விஜய் உடன் மாபியா படத்தில் அவர் நடித்து விட்டதால் வேண்டாம் என நிராகரித்து விட்டோம்.
பின் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பிரிய பவானி சங்கரை பார்த்தேன் என் கண்ணை விட்டு அவர் நீங்கவே இல்லை. அதன் பிறகு தான் நிச்சயமாக இப்படத்திற்கு அருண் விஜய்க்கு செம்ம பொருத்தமான ஜோடியாக பிரியா பவானி சங்கர் இருப்பார் என்று நினைத்துதான் அவரை படத்தில் கமிட் செய்தேன் என கூறினார்.