எங்க அப்பா காரை எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு போக இதுதான் காரணம்..! உண்மையை சொல்லி கண்ணீர் வடித்த மகன்

Actor Marimuthu
Actor Marimuthu

Marimuthu son speech : குணசித்திர நடிகர் மாரிமுத்து இறந்தது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது நான் நிதர்சனமான உண்மை காரணம் அந்த அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் முதலில் நடிகராக அஜித், ரஜினி என டாப் ஹீரோக்கள் தொடங்கிய இளம் நடிகர்கள் படங்கள் வரை நடித்துள்ளார்.

வெள்ளி திரையில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த படங்களை ரசிகர்களும், மக்களும் கொண்டாட தவறின அதன் பிறகு படம் இயக்குவதை முற்றிலுமாக விட்டுவிட்டு நடிப்பிற்கு அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இவருடைய திறமையை பார்த்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் மேலும் அந்த சீரியலையே டாப்  லெவலுக்கு உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு டப்பிங் ஸ்டுடியோவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் என கூறப்படுகிறது ஆனால் எந்த இந்த சிகிச்சையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை  அதன் காரணமாக அவர் இயற்கை எய்தினார்.

இவருடைய இரங்கல் செய்தியை கேட்டு சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் வந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் கடைசியாக அவரது ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் அங்கு நடைபெற்றது. இந்த நிலையில் மாரிமுத்துவின் மகனிடம்.. உங்க அப்பா  ஏன் மருத்துவமனைக்கு தனியாக காரில் சென்றார் என கேள்வி எழுப்பட்டது.

அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட பொழுது எங்களை அழைத்தது உண்மைதான் வீட்டில் இருக்கும்போது ஒருமுறை இவருக்கு இதுபோல ஏற்பட்டிருந்தது அப்பொழுதெல்லாம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறோம் உடனே சிகிச்சை எடுத்து எந்த பிரச்சினையும் இல்லாமல் மீண்டு வந்து இருக்கிறார் ஆனால் இந்த முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது வழக்கத்திற்கு மாறான நெஞ்சுவலியை உணர்வதாக கூறினார்.

எனவே, யாருக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டாம் நாங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டாம் உங்களால் கார் ஓட்ட முடிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே செல்லுங்கள் நாங்கள் வந்து விடுகிறோம் என கூறினோம். அதன் காரணமாகத்தான் என்னுடைய தந்தை யாருக்காகவும் காத்திருக்காமல் தனியாக தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றார் என்று பதிவு செய்துள்ளார்.